*ஏழையின் சிரிப்பில்...*
உண்டிட உணவிலாது உருக்குலைந்த மானிடரைக்/
கண்டிட நேர்ந்திடின் கருணையுடை மாந்தராய்/
பண்டியை நிரப்பிநாம் பசியாவது போக்கினால்/
எண்ணிலாக் களிப்பினை ஏழையிடம் காணலாம்/
உடுத்திட உடையிலாது ஊறுவிளைக்கும் சமயங்கள்/
படுத்திட இடமில்லாத பகல்காணும் இரவுகள்/
விடுத்திட அழைப்பிலாத வீதிகாணும் பொழுதுகள்/
தடுத்தாள வாய்த்திடின் தடைசெய்ய வேண்டுமே/
பணமிலா கணத்தினைப் பாரினில் கண்டிட்டால்/
மணமிலா வாழ்வதனை மணங்கூட்ட எண்ணியே/
குணந்தனை மெருகூட்டி குவலயத்தில் விழிகூட்டும்/
பாணர்களின் இறைவனாம் பாரியாக மாறுவோம்/
கல்வியுடன் செல்வமும் கண்டிடா ஏழையர்/
நல்லறிவு பெற்றுநாளும் நானிலத்தில் ஒளிரவே/
எல்லோரும் வழிகூட்டி ஏழைகளை மகிழ்வூட்டி/
எல்லையிலா வரங்காண இறைவனையும் வேண்டிடுவோம்/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment