காக்கும் பணியில் 100 ஆண்டுகள் தாண்டி...
தமிழ் புத்தாண்டு
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் என்று மிகவும் சுறுசுறுப்பாக
மகிழ்வாக இருந்த வேளையில்
நாம் மறந்த முக்கியமான நபர்கள்...
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அன்பு உள்ளங்கள்...
அவர்களின் பணிபோற்றும்
*#தீத்தொண்டுநாள்##
கடமை என்னை அழைக்கும்பொழுதும்
எங்கெங்கே தீக்கணங்கள் தாக்கும்பொழுதும்... எனத் தொடங்கி
விதியின் கோரப் பிடியில் சிக்கி நான் உயிரிழக்க நேரிட்டால் என்னுடைய மனைவி மக்களை உன் கருணைக் கரம் கொண்டு அரவணைத்துக் காப்பாற்றுவாயாக - என இறைவனிடம் வேண்டுவதாய் முடியும் தீயணைப்போர் உறுதிமொழியைப் படித்தாலே
அவர்களின் தொண்டுள்ளம் அறியலாம்...
தீயணைப்போர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எடுக்கும் உறுதி மொழி இது ...
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் நேரம் மிக முக்கியம்... நமது சாலைகளின் தரத்தினாலும் விபத்தில் சிக்கும் பகுதிகளின் தொலைவினாலும் அறியாமைச் சொற்கள் விளம்பும் மானிடர் மத்தியில்
விபத்து தகவலறிந்த ஒரு நிமிடத்திற்குள் நிலையத்திலிருந்து புறப்பட்டு எத்தகைய விபத்துக்கும் அஞ்சாது போரிடும் எனது நண்பர்களுக்கும் தீயணைப்பு வீரர் ஒவ்வொருவருக்கும் எனது உளங்கனிந்த
##தீத்தொண்டுநாள்##
நல்வாழ்த்துகள்...
இந்தப் புனிதமான பணியில் சில நாட்கள் என்னையும் பயன்படுத்திய இறைவா... நன்றி,...
இந்நன்னாளில் தீயணைப்போர் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல், உள நலம் தர இறைவனிடம் வேண்டுவோம்...
இயன்ற ஒத்துழைப்பு நல்குவோம்...
காக்கும் பணியினை வாழ்த்துவோம்...
தொண்டினைப் போற்றுவோம்...

No comments:
Post a Comment