Wednesday, 27 June 2018

கடுகுசந்தை அரசு உயர்நிலைப் பள்ளி நூலகத்தில் பிறந்தநாள் நன்கொடை திட்டம் நடைமுறையில் உள்ளது நாம் அறிந்ததே....

இத்திட்டம் மாணவர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது....

கடந்த ஆண்டு(2016-2017) எம் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மு.தெய்வக்கனி என்ற மாணவியும்
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் மே மாத விடுமுறையில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகளும்
 நினைவில் வைத்திருந்து பள்ளி திறந்ததும் முதல் நாளிலேயே நூலகத்திற்கு நூல்கள் நன்கொடை கொண்டுவந்து அளித்தனர்....

மிகவும் மகிழ்வான தருணமாக அமைந்தது...

இனிப்பு வழங்காத நிலையிலும்கூட நூலகத்திற்கு நூல்களை மாணவர்கள் நன்கொடையாக அளிக்கின்றனர்....

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கமும்
நூல்கள் நன்கொடை வழங்குவதில் ஆர்வமும் அதிகரித்துள்ளமை அவர்களின் நல்மதிப்பீடுகளை அறியத்தருகிறது....

மேலான மகிழ்வும் வாழ்த்துகளும்....

No comments:

Post a Comment