Wednesday, 19 October 2016
Wednesday, 12 October 2016
தமிழ்மொழியின் சிறப்புகள்
உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.
தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- ஞா.தேவநேயப் பாவாணர்
உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.
அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.
மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.
‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்
‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது
தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.
தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.
ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.
பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது
“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்
உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.
தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.
தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.
தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.
தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
பாரதிதாசன்,
“ தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”
என்று நெஞ்சார நெகிழ்கிறார்.
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.
திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்
ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

நன்றி தமிழ்மாறன்
அடைமொழியால் குறிக்கப்பெறும் - நூல்
எட்டுத்தொகை நூல்கள்
வேறு பெயர்கள்
1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
வேறு பெயர்கள்
1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
நற்றிணை
1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்டி
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்டி
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குறுந்தொகை
1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
ஐங்குறுநூறு
1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பரிபாடல்
1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
கலித்தொகை
1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
அகநானூறு
1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
புறநானூறு
1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.
1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
பத்துப்பாட்டு நூல்கள்:
திருமுருகாற்றுப்படை
1.முருகு
2.புலவராற்றுப்படை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பொருநராற்றுப்படை
இல்லை
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
சிறுபாணாற்றுப்படை
1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்).
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பெரும்பாணாற்றுப்படை
1.பாணாறு
2.சமுதாயப் பாட்டு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
மலைபடுகடாம்
1.கூத்தராற்றுப்படை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குறிஞ்சிப்பாட்டு
1.பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
2.களவியல் பாட்டு
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
முல்லைப்பாட்டு
1.நெஞ்சாற்றுப்படை
2.முல்லை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பட்டினப்பாலை
1.வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
2.பாலைபாட்டு
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
நெடுநல்வாடை
1.பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
2.மொழிவளப் பெட்டகம்
3.சிற்பப் பாட்டு
4.தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா).
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மதுரைக்காஞ்சி
1.மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)2.கூடற் தமிழ்
3.காஞ்சிப்பாட்டு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
வேறு பெயர்கள்
வேறு பெயர்கள்
நாலடியார்
1.நாலடி
2.நாலடி நானூறு
3.வேளாண் வேதம்
4.திருக்குறளின் விளக்கம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
நான்மணிக்கடிகை
1.துண்டு
2.கட்டுவடம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
களவழி நாற்பது
1.பரணி நூலின் தோற்றுவாய்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திருக்குறள்
1.திருவள்ளுவம்
2.தமிழ் மறை
3.பொதுமறை
4.முப்பால்
5.பொய்யாமொழி
6.தெய்வநூல்
7.வாயுறைவாழ்த்து
8.உத்தரவேதம்
9.திருவள்ளுவப் 10.பயன்(நச்சினார்க்கினியர்)
11.தமிழ் மாதின் இனிய உயர் நிலை
12.அறஇலக்கியம்
13.அறிவியல் இலக்கியம்
14.குறிக்கோள் இலக்கியம்
15.நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
16.பொருளுரை(மணிமேகலை காப்பியம்).
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பழமொழி நானூறு
1.பழமொழி
2.உலக வசனம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
முதுமொழ்க்காஞ்சி
அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
கைந்நிலை
ஐந்திணை அறுபது.

ஐம்பெருங்காப்பியங்கள்:
வேறுபெயர்
வேறுபெயர்
சிலப்பதிகாரம்
1.தமிழின் முதல் காப்பியம்
2.உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
3.முத்தமிழ்க்காப்பியம்
4.முதன்மைக் காப்பியம்
5.பத்தினிக் காப்பியம்
6.நாடகப் காப்பியம்
7.குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
8.புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்
9.ஒற்றுமைக் காப்பியம்
10.ஒருமைப்பாட்டுக் காப்பியம்
11.தமிழ்த் தேசியக் காப்பியம்
12.மூவேந்தர் காப்பியம்
13.வரலாற்றுக் காப்பியம்
14.போராட்ட காப்பியம்
15.புரட்சிக்காப்பியம்
16.சிறப்பதிகாரம்(உ.வே.சா)
17.பைந்தமிழ் காப்பியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மணிமேகலை
1.மணிமேகலைத் துறவு
2.முதல் சமயக் காப்பியம்
3.அறக்காப்பியம்
4.சீர்திருத்தக்காப்பியம்
5.குறிக்கோள் காப்பியம்
6.புரட்சிக்காப்பியம்
7.சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
8.கதை களஞ்சியக் காப்பியம்
9.பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
10.பசு போற்றும் காப்பியம்
11.இயற்றமிழ்க் காப்பியம்
12.துறவுக் காப்பியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
சீவகசிந்தாமணி
1.மணநூல்
2.முக்திநூல்
3.காமநூல்
4.மறைநூல்
5.முடிபொருள் தொடர்நிலைச் 6.செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
7.இயற்கை தவம்
8.முதல் விருத்தப்பா காப்பியம்
9.சிந்தாமணி
10.தமிழ் இலக்கிய நந்தாமணி
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குண்டலகேசி
1.குண்டலகேசி விருத்தம்
2.அகல கவி.

Wednesday, 5 October 2016
நண்பர்களே
நண்பர்களே ,
வணக்கம். நான் புதிதாகத் துவங்கியுள்ள இவ்வலைப்பூவில் தங்களின் மேலான வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்
அன்புடன்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வணக்கம். நான் புதிதாகத் துவங்கியுள்ள இவ்வலைப்பூவில் தங்களின் மேலான வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்
அன்புடன்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
Subscribe to:
Comments (Atom)